| இலங்கையின் பாதுகாப்பிற்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும்: இஸ்ரேல் ஜனாதிபதி |
| [ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 03:21.15 AM GMT +05:30 ] |
இலங்கையின் பாதுகாப்பிற்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் என இஸ்ரேல் ஜனாதிபதி சிமோன் பெரஸ் தெரிவித்துள்ளார். |
இஸ்ரேலுக்கான புதிய இலங்கை தூதுவர் டொனால்ட் பெரோவை சந்தித்த போது இஸ்ரேலிய ஜானாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் காலத்தில் இலங்கை விமானப்படையினருக்கு ப்ளு ஹொரைசன் ரக ஆளில்லா விமானத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். |
| முன்செல்ல |
|
|