இந்தியாவுக்கு விற்பனை செய்யப்படும் கொழும்பு காணிகள்?

Report Print Vethu Vethu in வீடு காணி
advertisement

கொழும்பிலுள்ள பிரதான காணிகள் பலவற்றை இந்தியாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு டீ.ஆர்.விஜேராம மாவத்தை 56, 70 மற்றும் 126 என்ற இலக்கங்களின் கீழ் சதோச நிறுவனத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் காணியை இந்தியாவின் ஜே ஹோட்டல் லிமிட்டட் சென்னை நிறுவனத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

அந்த காணிகளுக்கு மேலதிகமாக சதொச நிறுவனத்திற்கு சொந்தமான அதே வீதியில் அமைந்துள்ள இலக்கம் 40, 105 மற்றும் 109 என்ற இலக்கங்களில் உள்ள காணியை க்ரூடின் க்ரூப் கல்கத்தா இந்தியா என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் 165 என்ற இலக்கத்தின் கீழ் உள்ள சதொச நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடத்தை இந்தியா நிறுவனத்திற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பான்ஸ் பிரதேசத்தின் இலக்கம் 17 இன் கீழ் உள்ள காணியை இந்திய நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இவற்றிற்கு மேலதிகமாக கொழும்பு மற்றும் ததாசன்ன பிரதேசத்தில் பாரிய அளவு காணியை இந்திய நிறுவனம் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

advertisement