கொடியேற்றத்துடன் ஆரம்பமான கொழும்பு கதிர்வேலாயுத சுவாமி ஆலய மஹோட்சவம்

Report Print Akkash in மதம்

கொழும்பு கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹோட்சவ உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த ஆலயத்தின் மஹோட்சவ உற்சவமானது எதிர்வரும் பத்து தினங்களுக்கு நடைபெறவுள்ள நிலையில், இதனை முன்னிட்டு காலை மற்றும் மாலை வேளைகளில் விசேட பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற உள்ளன.

இதேவேளை, மஹோட்சவத்தின் முதல் நாளான இன்று இடம்பெற்ற கொடியேற்றத்திலும், பூஜைகளிலும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழாவானது எதிர்வரும் 14ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.