கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்தின் திருக்குளிர்த்தி திருவிழா

Report Print Nesan Nesan in மதம்

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்தின் 6 ஆவது நாள் திருக்குளிர்த்தி திருவிழாவின் சிறப்பு நிகழ்வான கன்னிக்கால் வெட்டு நிகழ்வும் கடற்கரைக்குச் சென்று மண்னெடுத்து வரும் நிகழ்வும் நேற்று மாலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

கல்முனை ஸ்ரீ கண்ணகி அம்மன் தேவஸ்த்தானத்தின் வருடாந்த கண்ணகி திருக்குளிர்த்தி வைபவமானது 6 ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 13 ஆம் திகதி திருக்குளிர்த்தி ஆடி கதவு மூடப்படும்.

இந்நிலையில் இன்று மாலை வட்டுக்குத்து பூஜை நடைபெற்று நாளை வினாயகப்பானை எழுந்தருளல் நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.