வந்தாறுமூலை கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தி விழா

Report Print Reeron Reeron in மதம்

மதுரையை எரித்துவிட்டு கோபத்துடன் வந்தாறிய இடமாக பண்டைய காலம்தொட்டு போற்றப்படுகின்ற வந்தாறுமூலையில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வந்தாறுமூலை கண்ணகி அன்னையவள் ஆலயத்தின் திருக்குளிர்த்தி விழா மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது.

திருக்குளிர்த்தி விழாவின் இறுதி நாளாகிய இன்றைய தினம் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகைதந்து கலந்துகொண்டுள்ளனர்.

கிழக்கிலங்கையில் வராற்றுப் புகழ்பெற்ற கண்ணகி அம்மன் ஆலயங்களுள் வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலயம் சிறப்பு வாய்ந்த ஆலயமாகும்.

இன்றைய திருக்குளிர்த்தி விழாவில் அம்மனுக்கு பொங்கல் விழா எடுத்து பொங்கல் படையல் மற்றும் ஆலய வழிபாடை தொடர்ந்து திருக்குளிர்த்தி என்பன நடைபெற்றது.

திருக்குளிர்த்தில் இடம்பெற முன்னர் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் சிலம்பு குழுக்குகின்ற மரபும் இவ்வாலயத்தில் தொட்டு இன்று வரை இடம்பெற்றுவருகின்றது.

இதேவேளை, இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல கண்ணகி அம்மன் ஆலயங்களில் திருக்குளிர்த்தில் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.