ஸ்ரீகடல் நாச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஒரு நாள் திருச்சடங்கு

Report Print Kumar in மதம்

மட்டக்களப்பு, பெரியகல்லாறு ஸ்ரீகடல் நாச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஒரு நாள் திருச்சடங்கு நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது.

ஒரு நாள் திருச்சடங்காக நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நேற்று பிற்பகல் பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து அம்பாள் கொண்டு செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் நள்ளிரவு திருச்சடங்கின் முக்கிய நிகழ்வான பூரணை கும்பம் நிறுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பெருமளவான அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வகையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.

இதேவேளை கடல் நாச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஒரு நாள் திருச்சடங்கினை காண்பதற்கு இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து பெருமளவானோர் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

advertisement