கறுவாக்கேணி முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருவிளக்கு பூஜை

Report Print Reeron Reeron in மதம்

வாழைச்சேனை, கறுவாக்கேணி முத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தின் திருவிளக்கு பூஜை நேற்று இரவு வெகு சிறப்பாக ஆலயத்தில் இடம்பெற்றது.

குறித்த திருவிளக்கு பூஜையில் பெருமளவிலான பெண்கள் கலந்து கொண்டிருந்ததோடு, இதன்போது நடைபெற்ற வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

ஆலயத்தின் மஹோற்சவகால பிரதம குரு சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவச்சாரியர் தலைமையில் திருவிளக்குப் பூஜைகள் இடம்பெற்றன.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆலய உற்சவத்தில் இன்று வேட்டைத் திருவிழா இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள அன்னை முத்துமாரியம்மனின் தீர்த்தோற்சவத்துடன் ஆலயத்தின் மஹோற்சவம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.