திருமுழுக்கை உறுதிப்படுத்தும் உறுதி பூசுதல் அருட்சாதனம்

Report Print Akkash in மதம்

கத்தோலிக்கர்களின் அடிப்படையான ஏழு திருவருட்சாதனங்களில் உறுதி பூசுதலும் ஒன்றாகும்.

உறுதி பூசுதல் என்னும் திருவருட்சாதனத்தின் மூலம் கத்தோலிக்கர்கள் இன்னும் நெருங்கிய முறையிலே திருச்சபையுடன் பிணைக்கப்படுகின்றனர்.

திருமுழுக்கு பெற்றவர்கள் உறுதி பூசுதல் என்னும் அருட்சாதனத்தின் வழியாக கிறிஸ்தவ வாழ்வுப் பயணத்தில் முன்னேறுகின்றனர்.

அவர்கள் இந்த அருட்சாதனத்தில், பெந்தகோஸ்து நாளில் இறைவன் அனுப்பிய அதே தூய ஆவியைப் பெற்றுக் கொள்கின்றனர்.

தூய ஆவியோடு இணைக்கப்படுவதால் விசுவாசிகள் இன்னும் முழுமையாக கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தவர்கள் ஆகின்றனர். திடம் பெறுகின்றனர்,

கிறிஸ்துவின் உடலை அன்பிலும் விசுவாசத்திலும் கட்டி எழுப்பக் கிறிஸ்துவுக்குச் சான்று பகரக் கூடியவராகின்றனர்.

அவர்கள் இறைவனின் அழியா முத்திரையால் பொறிக்கப்படுவதால் உறுதிபூசுதல் ஒரே முறைதான் அளிக்கப்படும்.

இந்நிலையில் கொழும்பு சென்.லூசியாஸ் ஆலயத்தின் உறுதி பூசுதல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றிருந்தன.