ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹாவிஷ்ணு ஆலய மஹா கும்பாபிஷேகம்

Report Print Akkash in மதம்

கொழும்பு - முகத்துவாரம் ஸ்ரீ பூமி நீளா பத்மாவதி சமேத ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹாவிஷ்ணு ஆலய கும்பாபிஷேக நிகழ்வு சிறப்பாக நிறைவுற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று நடைபெற்றதுடன், இதன்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 92 அடி உயர இராஜ கோபுரத்திற்கும், மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்த பூஜைகளிலும், ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்திலும் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டு இறையருளைப் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை இன்று முதல் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.