வாகரை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பால்குட பவனி

Report Print Navoj in மதம்

வாகரை - புளியங்கண்டலடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடந்த உற்சவத்தினை முன்னிட்டு இன்று பால்குட பவனி நடைபெற்றுள்ளது.

வாகரை - கண்டலடி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜையைத் தொடர்ந்து ஆரம்பமான பாற்குட பவனி வாகரை திருகோணமலை பிரதான வீதி, புளியங்கண்டலடி வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்துள்ளது.

பாற்குட பவனி ஆலயத்தை சென்றடைந்ததும் அம்பாளுக்கு பால் அபிஷேகம் மற்றும் பூஜைகள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை ஆலயத்தில் நடைபெற்ற பூஜைகள் மற்றும் பால்குட பவனியில் பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.