பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள்

Report Print Ashik in மதம்
advertisement

மன்னார் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலங்களில் ஒன்றான பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று(14) இடம்பெற்றது.

உதவி பிரதேசச் செயலாளர் கே.முகுந்தன் தலைமையில் வெண்கல செட்டிக்குளம் பிரதேசச் செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

எதிர்வரும் 28ம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள திருவிழா ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி திருவிழா திருப்பலியுடன் நிறைவடையவுள்ளது.

குறித்த திருவிழாவிற்கு வரும் பக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆலயப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து இந்த கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டுள்ளது.

மேலும் குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட அவசர தேவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கலந்துரையாடலின்போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை, செட்டிக்குளம் பங்குத்தந்தை ஜெயபாலன் குரூஸ், வெண்கள பிரதேசச் செயலக அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

advertisement