சிறப்பாக இடம்பெற்ற ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த திருவிழா

Report Print Thirumal Thirumal in மதம்

ஹட்டன் புனித திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று வெகுசிறப்பாக இடம்பெற்றது.

கண்டி மறைமாவட்ட பேராயர் வியானி பெர்னாண்டோ ஆண்டகையினால் இன்றைய திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் பங்குத்தந்தை லெஸ்லி பெரேரோ தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்ற திருவிழாவில் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

திருப்பலி பூஜை நிறைவுற்றதன் பின்னர் புனித அன்னம்மாளின் திருச்சொருப பவனி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி ஹட்டன் பிரதான பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் மல்லியப்பு சந்தி வரை பவனிச் சென்று ஆலயத்தை வந்தடைந்துள்ளது.

திருவிழா திருப்பலிகள் முறையே காலை 7.30 மணிக்கு சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டதன் பின்னர் 10.30 மணிக்கு விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

குறித்த திருவிழாவில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டதோடு அனைத்து வழிபாடுகளிலும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.