வவுனியா பிரதேச செயலகத்தின் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்

Report Print Theesan in மதம்

வவுனியா பிரதேச செயலகத்தின் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இன்று பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ. பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, நகர வரியிறுப்பாளர் சங்கத் தலைவரும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவருமான எஸ். சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், சமூக ஆர்வலர்கள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் அன்பக மாணவிகளின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு சோமசுந்தரப் புலவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்மை குறிப்பிடத்தக்கது.