தாந்தாமலை ஆலய கொடியேற்றம்: காடு மலைகளைத் தாண்டி படையெடுக்கும் பக்தர்கள்

Report Print Gokulan Gokulan in மதம்

மட்டக்களப்பு - மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு, சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 07.08.2017ம் திகதி திங்கட்கிழமை தீர்த்தோற்சவத்துடன் ஆலய உற்சவம் நிறைவு பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை அழகு மிகுந்த தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தை மலையும் மலை சார்ந்த இடமும் சூழ்ந்துள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் இருந்து அடியார்கள் காடு மலைகளைத் தாண்டி ஆலயத்தை தரிசிக்க உற்சவ காலங்களில் படையெடுக்கின்றனர்.