நல்லூரில் சிங்கத்தில் வலம் வருகிறான் சிங்கார வடிவேலன்!

Report Print Gokulan Gokulan in மதம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 16ஆம் நாள் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கடந்த 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் மஹோற்சவம் ஆரம்பமாகிய நிலையில், முருகப்பெருமான் இன்று சிங்கத்தின் மீது எழுந்தருளியுள்ளார்.

இவ்வாறு தினம் தோறும் நடைபெறும் கந்தனின் சிறப்பு பூஜைகள் மற்றும் வெளி வீதியுலா தரிசனத்தை காண நாள் தோறும் பெருந்திரளான மக்கள் வருகை தருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய தினமும் நல்லையம்பதியானின் திருவருளைப் பெற்றுக்கொள்ள பெருமளவிலான மக்கள் திரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.