நல்லூர் தேர்த் திருவிழா நேரடி ஒளிபரப்பில்.. இலட்சக்கணக்கில் அலையென திரண்ட பக்தர்கள்

Report Print Nivetha in மதம்

ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

24ஆம் நாளான இன்றைய தினம் (20) தேர்த்திருவிழாவைக் காண நாடெங்கிலுமிருந்து பெருந்திரளான பக்தர்கள் அலையென திரண்டு வந்துள்ளனர்.

மேலும், வெளிநாட்டு முருக பக்தர்களும் நல்லூரை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளதுடன், நாளைய தினம் 25ஆம் நாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

இதேவேளை, லங்காசிறியின் இணையத்தளம், முகப்புத்தகத்தினூடாக வழங்கி வந்த நல்லூர் திருவிழாவின் நேரலைக் காட்சிகள் தற்போது தொலைக்காட்சியினூடாகவும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

அந்த வகையில் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் தற்போது PEO TVஇல் Channal 365என்ற அலைவரிசையினூடாக குறிப்பிட்ட நேரங்களில் நல்லூர் திருவிழாவை நேரடியாக காண முடியும்.

நேரலையாக ஒளிபரப்பாகும் நேரம்..

21ஆம் திகதி காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவம்

22ஆம் திகதி மாலை 5 மணிக்கு பூங்காவனம்

23ஆம் திகதி மாலை 5 மணிக்கு வைரவர் உற்சவம்

குறித்த நிகழ்ச்சிநிரலுக்கமைய PEO TV இல் Channal 365 என்ற அலைவரிசையினூடாக நேரடியாக பார்வையிடலாம்.