கதிர்காமம் ஆலயத்தில் குழப்பம்

Report Print Manju in மதம்

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்தில் இன்று குழப்பநிலையொன்று ஏற்பட்டுள்ளது

குறித்த ஆலயத்தின் கதவுக்கான திறப்பு, பஸ்நாயக்க நிலமேயிடம் இருந்த நிலையில், அதனை அவர் உரிய நேரத்தில் ஆலயத்துக்கு கொண்டு வராத காரணத்தினால் ஆலயத்தின் அதிகாலைப் பூஜை இன்று காலை நடைபெறவில்லை என்று பூஜகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

எனினும் தாம் திறப்பை கொண்டுச் சென்ற போதும், பூஜகர்கள் கதவைத் திறக்க விடாமல் தடுத்ததாக, பஸ்நாயக்க நிலமே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இரண்டு தரப்பிலும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கதிர்காமம் ஆலயத்தின் அதிகாலைப் பூஜை நடைபெறாத சம்பவங்கள் வரலாற்றில் மிகவும் அரிதாகவே பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகலைப் பூஜைக்காக கூடி இருந்த பக்தர்கள் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், இந்த சம்பவம் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

advertisement