யாழில் புனித ஹஜ் பெருநாள் விசேட தொழுகை வழிபாடுகள் ஆரம்பம்

Report Print Thamilin Tholan in மதம்

புனித ஹஜ் பெருநாள் விசேட தொழுகை வழிபாடுகள் யாழ். குடாநாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இன்று காலை முதல் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் ஹஜ் பெருநாள் விசேட தொழுகை வழிபாடுகள் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் யாழ். மாவட்ட உலமா சபையின் பிரதித் தலைவர் மெளவி ஆர்.எச்.ஆஸிஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதன்போது ஹஜ் பெருநாளின் முக்கியத்துவம், மகிமை தொடர்பான சிறப்புரைகளும் இடம்பெற்றன.

இந்த விசேட தொழுகை நிகழ்வில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறி மகிழ்ந்தனர்.

அதேபோன்று பள்ளிவாசல்களில் இடம்பெறும் புனித ஹஜ் பெருநாள் விசேட தொழுகை வழிபாடுகளின் பின்னரும் தமது உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் உள்ளிட்டோருக்குத் தமது வாழ்த்துக்களைப் பரிமாறி மகிழ்வதை அவதானிக்க முடிகிறது.

advertisement