கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற வாலிபர் ஒன்று கூடல்

Report Print Suman Suman in மதம்

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் 2017ஆம் ஆண்டிற்கான வாலிபர் ஒன்றுகூடல் நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி கிறிஸ்து அரசர் ஆலயத்தில் இடம்பெற்ற இந்த வாலிபர் ஒன்றுகூடலில் கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் 150 மேற்பட்ட வாலிபர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

“பலன் தரும் கிறிஸ்து” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடல் தென்னிந்திய திருச்சபை நிறைவாழ்வு மையத்தின் அனுசரணையில் இடம்பெற்றது.

இதன்போது, ஆலோசனைகள், வேதாகம படிப்புக்கள், விளையாட்டுக்கள், குழு செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் யாழ். பேராயர், தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி திருமண்டலத்தின் சிறுவர் ஊழியத்தின் பாரிய நண்பர் குழுவின் செயலாளர் ஸ்ரேல் ஆகியோர் ஆலோசனை செய்திகளை வழங்கியுள்ளனர்.

கொழும்பு திருச்சபை ஊழியன் பத்மதயாளன், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு குருமுதல்வர்கள், திருச்சபை குருவானவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

advertisement