மலையகத்தில் சிறப்பிக்கப்பட்ட ஹஜ் பெருநாள்

Report Print Thirumal Thirumal in மதம்

நாடளாவிய ரீதியில் முஸ்லிம் மக்கள் ஹஜ் பெருநாளை சிறப்பித்து வரும் நிலையில், மலையகத்திலும் இதற்கான விசேட தொழுகை நடத்தப்பட்டது.

இறைவனின் தூதரான இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12ஆவது மாதமான துல் ஹஜ் மாதம் 10ஆம் நாள் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

தியாகம், அர்ப்பணிப்பு, கொடை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஹஜ் பெருநாளை தியாகத் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

முஸ்லிம்களின் ஐந்தாம் கடமையான ஹஜ் கடமையுடன் இணைந்ததாக கொண்டாடப்படும் ஹஜ் பெருநாள், ஹஜ் கடமையின் இறுதி நாளாகவும் அமைந்துள்ளது.

advertisement