ஆயித்தியமலை தூய சதா சகாய மாதா திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை

Report Print Kari in மதம்

ஆயித்தியமலை தூய சதா சகாய மாதா திருத்தலத்தின் 63ஆவது வருடாந்த திருவிழா கூட்டுத் திருப்பலியை முன்னிட்டு நேற்று மட்டக்களப்பில் பாதயாத்திரை ஆரம்பமானது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான ஆயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்ட வருடாந்த பாதயாத்திரை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயம் மற்றும் செங்கலடி புனித நிக்ளஸ் தேவாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

புனித மரியாளைச் சுமந்த வாகன ஊர்தி சகிதம் பேராலயத்திலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வீதி வழியாக சென்றுள்ளது.

இதன்போது, கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாதாவை பின் தொடர்ந்து ஆலயத்தை வந்தடைந்துள்ளனர்.

வருடாந்த திருவிழா கூட்டுத் திருப்பலியை யாழ். மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப் பொன்னையாவால் இன்று ஒப்புக் கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.