யாழில் சிறப்பாக இடம்பெற்ற கிருஷ்ண ஜெயந்தி தின விழா

Report Print Thamilin Tholan in மதம்

யாழ். கொக்குவில் கிருஷ்ணா அறநெறிப்பாடசாலையின் கிருஷ்ண ஜெயந்தி தின விழா இன்று கொக்குவில் கிழக்கு கோணாவளை வீதியில் அமைந்துள்ள கிருஷ்ணா அறநெறிப் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கிருஷ்ணா அறநெறிப் பாடசாலை முன்றலில் அமைந்துள்ள கிருஷ்ண பகவானின் திருவுருவச்சிலைக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் சிவஸ்ரீ உமாரமணக் குருக்கள் விசேட பூஜை வழிபாடுகள் ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து கிருஷ்ணா அறநெறிப்பாடசாலை மாணவர்களின் இறைவணக்கத்துடன் விழா ஆரம்பமானது. சாந்திகம் நிறுவனத்தின் ஆலோசகர் இரா.சந்திரசேகர சர்மா தலைமையில் இடம்பெற்ற விழாவில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் சிவஸ்ரீ உமாரமணக் குருக்கள் மற்றும் கொக்குவில் சாயி துர்க்கா ஆலயத்தின் பிரதம குரு ஆகியோர் ஆசியுரைகளை நிகழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து அறநெறிப் பாடசாலை மாணவ மாணவிகளின் வரவேற்பு நடனம், குழுநடனம், கிருஷ்ண பஜனைப் பாடல்கள் இசைத்தல் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளும் விமர்சையாக இடம்பெற்றன.

தொடர்ந்து விழாவில் கலந்து கொண்டவர்களுக்குப் பிரசாதம் மற்றும் மதியபோசனம் என்பன பரிமாறப்பட்டன. குறித்த அறநெறிப் பாடசாலையில் வருடம் தோறும் கிருஷ்ண ஜெயந்தி தின விழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.