வெருகல் சித்திரவேலாயுதர் ஆலய பாதயாத்திரை

Report Print Navoj in மதம்

வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலய உற்சவத்தினை முன்னிட்டு ஆன்மீக பாதயாத்திரையின் இறுதி நாள் யாத்திரை நேற்று கதிரவெளி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் கடந்த செவ்வாய்கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியிருந்தது.

இந்த ஆன்மீக பாதயாத்திரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பஜனைப் பாடல்களை பாடியவாறும் மற்றும் கையில் நந்திக் கொடி ஏந்தியவாறும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் வருடா வருடம் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலய உற்சவத்தினை சிறப்பிக்கும் முகமாக ஆறு நாட்கள் கொண்ட பாத யாத்திரை இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலய உற்சவத்தின் இறுதி நாள் தீர்த்த உற்சவமானது இன்று வெருகல் கங்கையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.