சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலப் பெருவிழா

Report Print Nesan Nesan in மதம்

மட்டக்களப்பு - சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் வருடாந்த திருவிழா கால வழிபாடுகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளன.

ஆலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள் கடந்த 08.09.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுடன், முதல் மூன்று நாள் வழிபாடுகளையும் யாழ்பாணம் அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்பணி பற்றிக் பிரசாத் வழிநடத்தி வந்தார்.

இதேவேளை இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் மேற்கொள்ளப்படவுள்ள வழிபாடுகளை அருட்பணி டேவின் ஐஏனு நடத்தவுள்ளார்.

அத்துடன், திருச்சிலுவை மகிமைத் திருவிழா நாளாகிய 14.09.2017 அன்று காலை 7.00 மணிக்கு அருட்பணி ஜோய் ஊஆகு தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருச்சிலுவைத் திருப்பண்டம் பொது மக்களின் ஆராதனைக்காக ஆலயத்தில் வைக்கப்படவுள்ளது.

14.09.2017 மாலை வழிபாட்டினைத் தொடர்ந்து இத் திருப்பண்டம் கிராமத்துக்குள் பவனியாகவும், பக்தியாகவும் வணக்கத்துக்குரியாதாகவும் எடுத்து வரப்படும்.

மேலும், 16.09.2017 அன்று மாலை 6.00 மணிக்கு அருட்பணி சு.திருச்செல்வம் அடிகளாரினால் நற்கருணை ஆராதனை இடம்பெறுவதுடன், 17.09.2017 அன்று திருவிழா திருப்பலியானது அதிவணக்கத்துக்குரிய ஆயர் கிறிஸ்ரீன் நோயல் இம்மனுவேல் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படும்.