மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை!

Report Vethu in பாதுகாப்பு

களனி பொலிஸ் பிரிவில் ஆயுத கொள்ளை குழு ஒன்று நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நபர்கள் இருவரினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், முகத்தை மூடி ஹெல்மட் அணிந்து கறுப்பு நிறத்திலான மோட்டார் சைக்கிளில் இந்தக் குழு பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குழுவினர் தற்போது வத்தளை, கிரிபத்கொட, வெலிசர, ஜாஎல ஆகிய பொலிஸ் பிரிவினுள் பயணிகளின் சொத்துகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் இரண்டினை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளைக்காரர்களை கைது செய்வதற்காக தற்போது வரையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக தற்போது விசேட பொலிஸ் குழுக்கள் தீவிரமான செயற்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்

மேலும் செய்திகளுக்கு

Comments