சிங்கப்பூர் சென்றுள்ள மஹிந்தவின் நிலை! பாதுகாப்பு வழங்க மறுப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு விசேட பாதுகாப்பு வழங்க அந்நாட்டு அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட விஜயம் காரணமாக மஹிந்த சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூரில் அவருக்கு எவ்வித உயிர் அச்சுறுத்தல்களும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் மலேசியா விஜயத்தில் ஈடுப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அந்த நாட்டில் வசிக்கும் தமிழர்கள் சிலரினால் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருடன் சென்ற பிரதிநிதிகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு வழங்குமாறு அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவுகளிடம் கோரிக்கை விடுக்குமாறு அவரது தனிப்பட்ட செயலாளர் உதித் லொக்கு பண்டார வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதற்கமைய வெளிவிவகார அமைச்சர் அந்த நாட்டு இலங்கை தூதுவர் ஊடாக சிங்கப்பூர் பாதுகாப்பு பிரிவுகளிடம் அதற்கான கோரிக்கையை கடிதம் மூலம் விடுத்துள்ளார்.

எனினும் மஹிந்த ராஜபக்சவுக்கு சிங்கப்பூரில் எவ்வித உயிர் ஆபத்துக்கள் அல்லது அச்சுறுத்தல்கள் ஏற்படுவதற்கு இடமில்லை என சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மலேசியாவுக்கு அருகில் அமைந்துள்ள போதிலும், சிங்கப்பூரினுள் எந்தவொரு வெளிநாட்டு பிரபுவின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்சவுடன் அவரது கடைசி மகன் ரோஹித ராஜபக்ச, லொஹான் ரத்வத்தே மற்றும் உதித் லொக்கு பண்டார ஆகியோர் சிங்கப்பூர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments