பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை:பெண் ஆசிரியர் கைது

Report Print Ramya in பாதுகாப்பு

சர்வதேச பாடசாலையில் கடமையாற்றும் பெண் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விநியோகித்த குற்றச்சாட்டு காரணமாகவே குறித்த ஆசிரியை நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியையுடன் இணைந்து போதைப் பொருள் விற்பனை செய்த மற்றுமொரு நபரையும் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

இருவரும் இணைந்து நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விநியோகித்து வந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் மற்றும் குறித்த நபரின் வீட்டில் இருந்த பல கேரள கஞ்சா,ஹெரோயின் உள்ளிட்ட போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆசிரியரின் வீட்டிலிருந்து ஒன்பது வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் விசெட அதிரடிப் படையினர் கூறியுள்ளனர்.

மேலும், மாணவர்களுக்கு போதைப் மாத்திரை ஒன்றை 400 ரூபா என்ற வீதத்தில் குறித்த சந்தெகநபர்கள் விற்பனை செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் கந்தான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் இன்றைய தினம் நீர்கொழும்ப நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Comments