யுத்தத்தின் பின்னர் மீண்டும் இலங்கை இராணுவத்தினர் தீவிர பயிற்சி! வெளியாகிய காணொளி

Report Print Mawali Analan in பாதுகாப்பு
0Shares
+
advertisement

இலங்கையின் முப்படைகளும் பலம் வாய்ந்த படைகளாக மேம்படுத்துவதற்கு அராசங்கம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.

இராணுவத்திற்கு வெளிநாட்டு படையினருடன் கூட்டுப் பயிற்சிகள் என பல வகையிலும் புதுப் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இலங்கை இராணுவத்தில் புதுப்படைப்பிரிவுகளும் உருவாக்கப்பட்டு கொண்டு வருகின்றதுடன், புதிதாக இராணுவ சீருடைகள் கொண்ட விஷேட படைப்பிரிவுகளும் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இலங்கை விமானப் படையினர் பணயக் கைதியை மீட்கும் வகை பயிற்சி ஒன்று செய்யப்பட்ட காணொளி நேற்று வெளியிடப்பட்டு வைரலாக பரவி வருகின்றது.

பொது மக்களுக்கு முன் குண்டுகளை பொழிய வைத்தும், சரமாரியாக சுட்டுக் கொண்டும் தீவிரவாதிகளை எதிர்க்கும் வகையில் நிஜமான யுத்தம் ஒன்றினை கண் முன் காட்டும் வகையில் இந்த தீவிர பயிற்சி அமைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களிலும் இந்த காணொளி அதி வேகமாக பரப்பபட்டு வருகின்றது. இதன் மூலம் இலங்கை இராணுவத்தின் சிறப்பு பற்றி அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

யுத்தம் நிறைவடைந்து விட்ட பின்னர் இவ்வாறு புதிய படைகளும், அதி விஷேட பயிற்சிகளும் இலங்கை இராணுவத்திற்கு கொடுக்கப்பட்டு வருவது குறித்து கேள்வி எழுப்பபட்டுவருகிறது.

இலங்கை இராணுவம் தொடர்பில் பல்வேறு வகையான விமர்சனங்கள் காணப்பட்டாலும் மற்றொரு பக்கம் சக்தி மிக்க இராணுவமாக மாற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சு முக்கியத்துவம் கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

advertisement

Comments