இது விமானப்படைக்குச் சொந்தமான காணி : உள்ளே வந்தால் சூடு

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

தமது சொந்த நிலங்களை விடுவிக்கக் கோரி கேப்பாப்புலவு மற்றும் பிலக்குடியிருப்பு மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனினும் அவர்களுக்கு இதுவரை உறுதியான பதில் எதனையும் அதிகார தரப்பினரும், சம்பந்தப்பட்டவர்களும் வழங்கவில்லை. இந்நிலையில் மக்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு இடங்களிலும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இராணுவத்தினர் ஒரு அறிவித்தலை விடுத்துள்ளனர். “இது விமானப்படைக்குச் சொந்தமான காணியாகும். தேவையில்லாமல் உட்செல்லத்தடை. தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டக்கு இலக்காகுவீர்கள்” என பிலக்குடியிருப்பில் அறிவித்தல் பலகை போடப்பட்டிருக்கிறது.

மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களினால் இதுவரை சரியான எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இராணுவத்தினரின் குறித்த அறிவிப்பு காரணமாக மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

இதேவேளை, கேப்பாப்புலவிலும் இதே போன்றதொரு அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments