ஈழத் தமிழர்களின் பெயரால் மற்றவர்களின் உடைமைகளை சேதப்படுத்துவதை நிறுத்துங்கள்

Report Print Gokulan Gokulan in பாதுகாப்பு

ஈழத் தமிழர்களின் அவலத்தின் பெயரால் நாடுகளின் வணிகத்தை முடக்குவோம்’ என்பது எந்த வகையிலும் நியாயமற்றது என புலம்பெயர் அமைப்புக்களும் ஈழதமிழர் மற்றும் உலகத் தமிழர் அறிஞர் குழாமும் குறிப்பிட்டுள்ளது.

மார்ச் 20, 2017 திங்கள், காலை 10 மணி, ராஜரத்தினம் மைதானம், எழும்பூர். சென்னையில் மே பதினேழு இயக்கம் ஒழுங்கு செய்துள்ள போராட்டம் குறித்து புலம்பெயர் அமைப்புக்களும் ஈழதமிழர் மற்றும் உலகத் தமிழர் அறிஞர் குழாமம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மார்ச் 20, 2017 திங்கள், காலை 10 மணி, ராஜரத்தினம் மைதானம், எழும்பூர்.சென்னையில் மே பதினேழு இயக்கம் ஒழுங்கு செய்துள்ள அமெரிக்கா இந்தியா இங்கிலாந்து தூதரகங்கள், வணிக நிலையங்கள் மற்றும் அலுவலகங்களை முற்றுகை செய்யும் சேதப்படுத்தும் போராட்டத்தை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஈழத்தமிழர்களின் பெயரால் நடத்தப்படும் இப் போராட்டங்கள், உலக அரங்கில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கும்.

எந்தவொரு நாடும் தங்களுக்குள் கொண்டுள்ள உறவுக்கோ, அவர்களின் நலன்களுக்கோ தமிழர்கள் ஒரு போதும் எதிரானவர்களல்ல. ‘ஈழத் தமிழர்களின் அவலத்தின் பெயரால் நாடுகளின் வணிகத்தை முடக்குவோம்’ என்பது எந்த வகையிலும் நியாயமற்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை ஈழத்தமிழர்கள் பால் மாற்றாத மட்டில் தமிழர் சார்பாக எந்த மாற்றமும் ஐ.நாவில் ஏற்படப்போவதில்லை.

ஆகையால், தமிழர்களின் நீதியான வேண்டுதலை நீங்கள் வதியும் நாடான இந்தியாவைக் கொண்டு உலக அரங்கில் ஒலிக்கச் செய்யவும். குறைந்த பட்சம் இந்திய மாநில அரசுகள் மட்டத்திலாவது, ஈழத்தமிழர்களுக்காக போராடுவதாகச் சொல்லும் தமிழக அமைப்புக்கள் செய்தாக வேண்டும்.

ஈழத்தமிழர்களின் பெயரால் மற்றவர்களின் உடைமைகளை சேதப்படுத்துவதையோ மற்றைய நாட்டவர்களை புண்படுத்துவதையோ ஈழத்தமிழர்கள் பால் போராடுவதாகச் சொல்லும் தமிழக அமைப்புக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர்களின் கொழுந்து விட்டெரியும் இனப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்காது, தமிழக மக்களும் தமிழகப்போராட்ட அமைப்புக்களும் மே பதினேழு இயக்கம் ஒழுங்கு செய்துள்ள இம் முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்காது விலகியிருக்குமாறு தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments