இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி : அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் பலி

Report Print Ramya in பாதுகாப்பு

பாகிஸ்தானின் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதி ஒருவர் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானின் பக்டிக்கா மாகாணத்தில் பர்மல் மாவட்டத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் இந்த நபர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் குவரி யாசீன் என்ற இந்த தீவிரவாதியுடன் அவரது மூன்று சகாக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-தலிபான் , லஷ்கர்-இ-ஜாங்வி மற்றும் அல் கொய்தா உள்ளிட்ட பல தடை செய்யப்பட்ட அமைப்புகளில் குவரி யாசீன் இணைந்துள்ளவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் பட்டியலில்,குவரி யாசீனின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக லாக்ஷர் நகரில் இருந்து கடாபி மைதானத்திற்கு செல்லும் வழியில் இலங்கை அணியினர் சென்ற பஸ் மீது பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது இலங்கை அணி வீரர்கள் காயமடைந்திருந்தனர். இதேவேளை,இலங்கை அணி மீதான தாக்தகுதலுடன் தொடர்புடைய 4 பேர் முன்னதாக பாகிஸ்தான் பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments