லசந்த கொலை வழக்கில் திடீர் திருப்பம் : மூளையில் சிக்கியிருந்த ஆதாரம்..!

Report Print Murali Murali in பாதுகாப்பு
advertisement

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை வழக்கின் புதிய தகவலை குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் இன்று வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்படி, முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் கீழ் செயற்பட்ட சிறப்புக் குழுவொன்றே, லசந்த கொலையின் பின்னணியில் இருந்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

அத்துடன், உபாலி தென்னகோன் மற்றும் கீத் நொயார் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் மீதான தாக்குதல் சம்பவங்களுடனும் இந்த குழுவினருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லசந்த விக்கிரமதுங்க துப்பாக்கிச் சூட்டினால் மாத்திரம் உயிரிழக்கவில்லை என்றும், அவர் தலையில் கூரிய பொருள் ஒன்றினால் தாக்கப்பட்டிருந்தார் எனவும் குற்றப் புலனாய்வு பிரிவினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், அந்த கூரிய ஆயுதத்தின் பகுதி ஒன்று லசந்த விக்கிரமதுங்கவின் மூளையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கபில ஹெந்தவிதாரனவின் கீழ் இயங்கிய இந்த விசேட குழுவானது ஐந்து சிம் அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஊடகவியலாளர்களின் தாக்குதல் மற்றும் கொலையுடன் தொடர்புடைய அனைத்து உரையாடல்களுக்கும் இந்த சிம் அட்டைகளையே பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

advertisement

Comments