பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு தொல்லை கொடுத்த பணிப்பாளர்: விசாரணை துரிதம்: ஊடக அமைச்சு

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

கொழும்பு ஊடகம் ஒன்றில் பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு பணிப்பாளர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்தமை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டுத்தாபன தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த முறைபாடு தொடர்பாக நேற்றைய தினம் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்கவிடம் வினவப்பட்டது. இது தொடர்பாக துரித விசாரணை நடத்தப்படும் என்று ஊடக அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, விசாரணைக்காக தமிழ் செய்திப்பிரிவின் பணிப்பாளரை குறித்த ஊடக நிர்வாகம் இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இருப்பினும் இவர் தொடர்ந்தும் பலவந்தமாக செய்திப்பிரிவில் இருந்து வருகின்றமை நிர்வாகத்திற்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஊடக அமைச்சின் அறிக்கையினையும், நிர்வாகத்தின் நடவடிக்கையையும் இவர் அவமதித்து நடப்பது குறித்து நிறுவன ஊழியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பெண் செய்தியாளர்கள் மீதான இந்த நடவடிக்கைக்கு விசாரணை மூலமாக தீர்வு கிடைக்குமா என அந்த ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Comments