விமானம் தரையிறங்கும் போது விபத்து: 44 பேர் பலி?

Report Print Samy in பாதுகாப்பு

தெற்கு சூடானில் 44 பேருடன் தரையிறங்கிய விமானம், திடீரென விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதில் 44 பேரும் பலியானதாக அஞ்சப்படுகிறது.

தெற்கு சூடானைச் சேர்ந்த ‘தி சவுத் சுப்ரீம் ஏர்லைன்ஸ்’க்கு சொந்தமான விமானம் ஒன்று உள்ளூர் நேரப்படி மதியம் 3 மணிக்கு ஜுபாவில் இருந்து வவு விமான நிலையத்திற்கு வந்தது.

விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, திடீரென விபத்துக்குள்ளாகி அந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது.

விமானத்தின் வால்பகுதி மட்டும் தெரியும்படியும், மற்ற பகுதியில் எரிந்த நிலையில் சிதறிக்கிடக்கும் படங்களை உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளது.

இதனால் விமானத்தில் இருந்த 44 பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்து நடந்ததும் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் விரைந்தன.

ஆனால் உள்ளூர் ரேடியோ ஒன்று, 9 பேர் உயிரோடு மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

‘தி சவுத் சுப்ரீம் ஏர்லைன்ஸ்’ கடந்த 2013-ல் இருந்துதான் விமான போக்குவரத்தை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

- Maalai Malar

Comments