சார்ள்ஸ் அன்டனியை பிரபாகரன் சுட்டுக் கொன்றாரா? சிங்கள ஊடகத்தின் புதிய கண்டுபிடிப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையின் அரசியல் தளத்திலோ அல்லது சிங்களம் சார்ந்த பிரச்சினையோ தலைதூக்கும் போது, அதிலிருந்து மக்களை திசை திருப்பும் வகையில் தென்னிலங்கை ஊடகங்கள் பல செய்திகளை வெளியிடுவது வழமை.

விடுதலைப் புலிகள், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பனவற்றை அடிப்படையாக வைத்து பல புனைகதைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம், தென்னிலங்கை மக்களின் உணர்வுகளில் கொந்தளிப்பு நிலையை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

சமகாலத்தில் அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. கிடுகிடுவென உயரும் விலைவாசி, பொருளாதார நெருக்கடி, முன்னாள் அரசாங்கத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டு என பல உண்டு.

ஆனால் தற்போது மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் 32 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது நல்லாட்சி அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளது.

இதிலிருந்து மக்களை திசை திருப்பும் வகையில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று பரபரப்பு தகவலை ஒன்றை வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால், அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

முறையற்ற வகையில் நடந்த கொண்ட மகனை பிரபாகரன் சுட்டுக் கொன்றதாக அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை நியாயப்படுத்தும் வகையில் சிறந்த புனைகதை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

கண் பார்வையற்ற பாடசாலையில் இருந்த இளம் பெண்களை துஷ்பிரயோகம் செய்ததாகவும், இதனால் கோபமடைந்த பிரபாகரன், சார்ள்ஸ் அன்டனியை சுட்டுக்கொன்றதாக, இறுதிக்கட்ட போரில் உயிர்தப்பிய தர்மபுரம், விஷ்வமடு பிரதேசங்களின் மக்கள் தெரிவித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் அந்த பிரதேசத்திற்கு சிங்கள ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் விஜயம் மேற்கொண்டதாகவும், இதன் போது மக்கள் இவ்வாறு தெரிவித்ததாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

விடுதலை புலிகள் அமைப்பு அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கடுமையான ஒழுக்கமுறையை பின்பற்றியதாகவும், அவ்வாறான விடயங்களுக்கு தொடர்புடையவர்கள் அந்த அமைப்பினால் சுட்டுக் கொலை செய்யப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் ஒழுக்கம் நிறைந்த அமைப்பாக விடுதலைப் புலிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை இலங்கையின் பல்வேறு அரசாங்கங்கள் கூட ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்நிலையில் தமிழினத்தையும் விடுதலைப் புலிகளையும் இழிவுபடுத்தும் வகையில் குறித்த ஊடகம் பொய்யான தகவலை வெளியிட்டு, தென்னிலங்கை மக்களை மகிழ்ச்சிப்படுத்த முனைந்திருக்கிறது.

இறுதிக்கட்டப் போரின் கடைசி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சார்ள்ஸ் அன்டனி சுட்டுக் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்திருந்த நிலையில், இப்படியானதொரு தகவலை குறித்த ஊடகம் வெளியிட்டுள்ளமை அதன் போலித்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

எனினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இராணுவ பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன, இந்த தகவலை மறுத்துள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இவ்வாறான சம்பவத்தை இதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை எனவும், இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

advertisement

Comments