பயங்கரவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் புதிய வரைபு! புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்!

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு வரைபு, எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி கைது செய்யப்பட்டவர்களை சிறைகளில் அடைக்கும் நடவடிக்கையை ஊக்குவிக்கும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு வரைபின் மூன்றாவது நகலுக்கு கடந்த மே 3ம் திகதியன்று இலங்கையின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. எனினும் நாடாளுமன்ற வாக்கெடுப்பு திகதி இன்னும் குறிக்கப்படவில்லை.

எனினும் இந்த வரைபு, தற்போதைய சட்டத்துக்கு அமைவாகவே உள்ளது. அத்துடன் புதிய பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இது சர்வதேச நடைமுறைகளுடன் ஒப்பிடும்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய உறுதி மொழிக்கு அமைவாக தயாரிக்கப்படவில்லை என்று மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆசியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

எனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள், இலங்கைக்கு இந்த விடயத்தில் அழுத்தம் கொடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு மதிப்பளிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

Comments