இலங்கையில் அதிசய கட்டடம்! அமெரிக்க, கனேடிய குடியுரிமையை கொண்டவருக்கு ஆபத்து

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் நவீன முறையிலான கட்டடத்தை நிர்மாணித்து வரும் இஸ்ரேலிய கட்டடக்கலை நிபுணருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பில் வசீகரமான முறையில் Altair என்ன வீட்டுமனைத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. கொழும்பு பேரே ஏரிக்கு அருகில் உள்ள 68 மாடிகளை கொண்ட வகையில் கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் Altair வீட்டுமனைத் தொகுதியின் கட்டடத்தின் பிரதான கட்டகலை நிபுணரான யூத நாட்டை சேர்ந்த Moshe Safdie என்பவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு அரசியல் மற்றும் மனித உரிமை அமைப்புகளினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்டுள்ள பாலஸ்தீனத்திற்கு சொந்தமான பகுதியில் யூதக் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கு Moshe Safdie முன்வந்தமையே அதற்கு காரணமாகும்.

இது தொடர்பில் முதல் முறையாக 2010ஆம் ஆண்டு பிரித்தானிய ஊடகத்தில் வெளியாகிய கடிதத்தில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு ‘Sri Lankan Journalists for Global Justice’ என்ற அமைப்பினால் Moshe Safdie என்பவருக்கு இலங்கையினுள் தங்கள் முதலாவது எதிர்ப்பை வெளியிட்டனர்.

2010ஆம் ஆண்டு பிரித்தானிய பத்திரிகையில் வெளியாகிய கடிதம் தொடர்பில் Moshe Safdie தெளிவுப்படுத்திய நிலையில், அந்த கடிதம் வெளியிட்டமை தொடர்பில் பிரித்தானிய ஊடகம் அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

எனினும் இலங்கையின் ‘Sri Lankan Journalists for Global Justice’ என்ற அமைப்பு அந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாமல் எதிர்ப்பு வெளியிடுவது நியாயமற்ற செயல் என இஸ்ரேலிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

2013 ஆம் ஆண்டு Altair என்ற கட்டடத்தை திட்டமிட்ட Moshe Safdie பல முறை இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச கட்டடக் கலை நிபுணர்களின் மாநாட்டிலும் உரையாற்றியுள்ளார்.

Moshe Safdie என்பவர் கனடா, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளிலும் குடியுரிமை கொண்ட உலக புகழ்பெற்ற 78 வயதுடைய கட்டடக்கலை நிபுணராவார்.

சிங்கப்பூரின் Marina Bay Sands, ஜெருசேலேமின் Yad Vashem Holocaust History Museum, கனடா ஒடாவ நகரத்தில் உள்ள National Gallery of Canada, வொஷிங்டன் நகரத்தில் உள்ள United States Institute of Peace Headquarters, இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தில் உள்ள Khalsa Heritage Memorial Complex மற்றும் பங்களாதேஷ் நகரத்தில் உள்ள Asian University for Women ஆகிய கட்டடங்களுக்கு கட்டடக் கலை நிபுணராக செயற்பட்டுள்ளார்.

சவூதி அரேபியா, டுபாய், கட்டார் ஆகிய நாடுகள் உட்பட கட்டடங்கள் நிர்மாணிக்கும் Moshe Safdieக்கு இலங்கையினுள் வெளியிப்படுகின்ற எதிர்ப்பை பெரிதாக கண்டுக்கொள்ளத் தேவையில்லை என குறிப்பிடப்படுகிறது.

எனினும் இஸ்ரேல் ஊடகங்களின் செய்திக்கமைய அது இலங்கையினுள் காணப்படுகின்ற இஸ்ரேல் எதிர்ப்பிற்கான ஒரு விடயமாக கூறப்படுகின்றது.

Altair கட்டடத்தொகுதி இத்தாலியில் உள்ள சாய்ந்த கோபுரத்தினை போன்று அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரினை நினைவு கூர்ந்து கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ

Comments