கடற்பிராந்திர பாதுகாப்பு குறித்து இலங்கை - பாகிஸ்தான் முக்கிய பேச்சு

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ், பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியை சந்தித்துள்ளார்.

மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் கடற்படை தளபதி தலையிலான குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று பாதுகாப்பு செயலாளரை சந்தித்து பேச்சுவாரத்தை நடத்தப்பட்டுள்ளது.

இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது மற்றும் கடற் பிராந்திய பாதுகாப்பு குறித்தும் இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்தச் சந்திப்பை நினைவுகூரும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாரிக் கொள்ளப்பட்டுள்ளன.