கொழும்பு நகரை சுற்றி வளைக்க தயாராகும் பொலிஸார்

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

கொழும்பின் நகர எல்லைக்குள் கொழும்பு நகர சபை, இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட சோதனை நடவடிக்கையை நாளை இரவு முதல் அமுல்படுத்தபடவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் வீ.கே.ஏ.அனுர தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை சுற்றுச் சூழலை மாசடைய செய்பவர்களை கைது செய்வதற்காகவே மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள வீதிகளில் குப்பைகளை கொட்டிய பலர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.