சுமந்திரன் எம்.பி கொலை முயற்சியுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Report Print Yathu in பாதுகாப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே பதில் நீதிமன்ற நீதிவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம், ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை சந்தேகநபர்கள், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்யத்திட்டம் தீட்டியதாகத் தெரிவித்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.