திட்டமிட்டு மறைந்துள்ளார் ஞானசாரர்! கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்

Report Print Shalini in பாதுகாப்பு

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்வதற்கு தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இவரை கைது செய்வதற்கு நீதிமன்ற உத்தரவுகள் இருப்பதால் ஞானசாரரை மறைத்து வைத்திருப்பதும் சட்டப்படி குற்றம் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு சிலர் அடைக்கலம் கொடுத்துள்ளதாக வெளிவரும் செய்திகள் குறித்தும் தாம் கவனம் செலுத்துவதாகவும், குறிப்பிட்டார்.

மேலும் ஞானசாரரை கைது செய்வதற்காக நவீன தொழில் நுட்பமும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஞானசார தேரரை யார் மறைத்து வைத்திருக்கின்றார் என இன்னும் தெரியாது. அப்படி மறைத்து வைத்திருந்தால் அது குற்றம்.

எனினும் அவர் மிகத் திட்டமிட்டே மறைந்துள்ளார். எனவே அவரைக் கைது செய்ய தொடர்ந்தும் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் பிரியந்த ஜயகொடி குறிப்பிட்டார்.