யாழில் பலப்படுத்தப்பட்டுள்ள புலனாய்வுப் பிரிவுகளின் செயற்பாடுகள்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இராணுவப் புலனாய்வு பிரிவுகளின் செயற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கில் ஏதேனும் சம்பவங்கள் நடந்து, தேவை ஏற்பட்டால், முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளும் அதிகாரம் பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், யாழ். நகரில் விசேட அதிரடிப்படையினருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் சிவில் நபர்களை சோதனையிடுதல் மற்றும் கைது செய்யும் அதிகாரம் இராணுவத்தினருக்கு வழங்கப்படவில்லை.

விசேட அதிரடிப் படையினருக்கு உதவுவது மாத்திரமே இராணுவத்தினரின் பணியாகும். மேலும் இராணுவப் புலனாய்வு பிரிவு அரச புலனாய்வு சேவைக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.