70 பொலிஸ் அதிகாரிகளை கொடுமைப்படுத்திய பொலிஸ் மா அதிபர்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட காலப்பகுதியில் கீழ்மட்ட பொலிஸ் அதிகாரிகளை சித்திரவதைக்கு உட்படுத்தியதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான சம்பவம் 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெற்றள்ளது. காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் அதிகாரிகள் 70 பேர் வரையில் ஒரு மணித்தியாலத்திற்கு அதிக நேரம் வீதியில் வைத்து மண்டியிட வைத்திருந்தார்.

மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் மூலம் பொலிஸ் அதிகாரிகளை சித்திரவதைக்கு உட்படுத்தியதோடு பொது மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியுள்ளார்.

கீழ்மட்ட அதிகாரி ஒருவர் தவறு செய்திருந்தாலும் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிக்கு அவரை தண்டிப்பதற்கு அதிகாரம் இல்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் அப்போதைய பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனின் கீழ் இயங்கிய விசாரணை பிரிவின் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன்போது பூஜித குற்றம் செய்ததாக அப்போதைய பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இலங்ககோன், பூஜித தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்போதைய அரச சேவை ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

எனினும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உதவியுடன் சம்பவத்தை மூடி மறைப்பதற்கு பூஜித ஜயசுந்தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.