ஒரே நாளில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய 777 பேர் கைது

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று முன்தினம் நாடு முழுவதும் மேற்கொண்ட தேடுதலில் இராணுவத்தில் இருந்து தப்பியோடிய 777 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இராணுவ அதிகாரி எனவும் ஏனையவர்கள் சாதாரண சிப்பாய்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஒரே நாளில் அதிகளவானோர் கைது செய்யப்பட்டமை இதுவே முதல் முறையாகும் எனவும் இராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.