கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடிய பிரஜைகளுக்கு என்ன நடந்தது?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கனேடிய பிரஜைகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் நிராகரித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணிப்பதற்கு தம்மை அனுமதிக்கவில்லை என கனேடிய சுற்றுலா பயணிகள் குழுவொன்றை நேற்று முறைப்பாடு செய்திருந்தது.

இந்த குற்றச்சாட்டை மறுத்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சோதனையிடும் நடவடிக்கைகள் நிறைவு செய்து, சோதனை கவுண்ட்டர் மூடப்பட்ட பின்னரே கனேடிய சுற்றுலா பயணிகள் அறிவித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கவுண்ட்டர் மூடப்பட்டதன் காரணமாக, அந்த விமானத்தில் (UL195) கனேடிய பயணிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எயார்லைன்ஸ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து பயணிகளினதும் பாதுகாப்பு மற்றும் வசதிகள் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு பொறுப்புள்ளது. இதனால் பயணிகளுக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டிருந்தால் வருந்துகின்றோம் என எயார்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

எப்படியிருப்பினும் சோதனையிடும் கவுண்டர் மூடப்பட்ட பின்னர் பயணிகளை ஏற்க முடியாதென அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வாறு பயணிகளை ஏற்றிருந்தால் விமான பயணத்திற்கு தடை அல்லது தாமதம் ஏற்படும் என எயார்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கப்பட்ட போதிலும் தம்மை விமானத்தில் பயணிப்பதற்கு அனுமதிக்கவில்லை என 8 கனேடிய பயணிகள் நேற்று கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.