விமான நிலையத்தில் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சீனப்பிரஜை

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

இலங்கையில் இருந்து 26 இலட்சத்து 52 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சீனாவுக்கு கடத்திச் செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சீனப் பிரஜையான சந்தேகநபரிடம் இருந்து அமெரிக்க டொலர்களும், ஜப்பான் யென்களையும் தாம் பறிமுதல் செய்துள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

54 வயதான சீனப் பிரஜையிடம் இருந்து பறிமுதல் செய்த பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.