வடகொரியாவின் அணுப்பரிசோதனை குறித்து இலங்கை கண்டனம்

Report Print Aasim in பாதுகாப்பு

வடகொரியாவினால் கடந்த மூன்றாம் திகதி மேற்கொள்ளப்பட்ட அணுப் பரிசோதனை குறித்து இலங்கை அரசாங்கம் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வௌிநாட்டலுவல்கள் அமைச்சு இன்று கண்டன அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடகொரிய அரசாங்கத்தின் அணுப் பரிசோதனை நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை மீறும் செயற்பாடாகும்.

அத்துடன் பிராந்தியத்தின் அமைதியையும் குலைக்கக் கூடியது. அவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்காக வடகொரியாவுக்கு எதிராக சர்வதேசம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இலங்கையும் ஏற்றுக் கொள்கின்றது.

மேலும் வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை குறித்து இலங்கை அரசாங்கமும் தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது என்றும் குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement