இரவு நேரங்களில் வீடுகளுக்குள் நுழையும் மர்மகும்பல்! அச்சத்தில் மக்கள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

வங்கி கடன் அட்டைகைளின் இரகசிய இலக்கங்களை கண்டுபிடித்து பாரிய கொள்ளையில் ஈடுபடும் மர்மகும்பல் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

அத்துருகிரிய பிரதேசத்தில் காலை மற்றும் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் இந்த மர்மகும்பல் காரணமாக பிரதேச மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

இரவு நேரங்களில் மக்களின் வீடுகளுக்குள் நுழையும் மர்மகுழு, அங்குள்ள சொத்துக்களை கொள்ளையடித்து வருகின்றனர்.

அத்துடன் வங்கி கடன் அட்டையை வங்கி புத்தகத்துடன் கொண்டு சென்று இரகசிய இலக்கத்தை கண்டுபிடித்து கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக நோய்வாய்ப்பட்டுள்ள நபர்களின் வீடுகளுக்குள் நுழைந்து மருந்து கொள்வனவு செய்யவுள்ள பணத்தை திருடி செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொள்ளைக்குழு மோட்டார் சைக்கிளில் வருவதாக தெரிவித்துள்ள பிரதேச மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் இரவு நேர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


you may like this video