வெலிக்கடை சிறைக்குள் திடீரென புகுந்த புலனாய்வுதுறை! தீவிர சோதனை

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் உத்தரவின் அடிப்படையில் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் திடீர் தேடுதல் நடவடிக்கையொன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தேடுதல் நடவடிக்கை சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளால் நேற்று பிற்பகல் ஒரு மணி முதல் மூன்று மணி வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறைச்சாலையின் மருத்துவமனைப் பகுதியில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அரசியல் கைதிகள் உட்பட அனைத்து கைதிகளிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளால் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட தொலைபேசிகள் சிறை அதிகாரிகளின் உதவியுடனேயே கைதிகளுக்கு கிடைத்திருக்கும் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

advertisement