போலி காசோலையை வழங்கி சுமார் 24 இலட்சம் ரூபா மோசடி செய்த நபரை தேடும் பொலிஸார்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

போலி காசோலையை வழங்கி சுமார் 24 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

நீர்கொழும்பு, சீ.எம்.பெர்னாந்து மாவத்தையில் வாடகை வீட்டில் குடியிருந்த இவர், 84/2 நீர்தேக்க வீதி, சியம்பலாதென்ன, கலேவல என்ற முகவரில் வசிப்பதாக கூறி போலி அடையாள அட்டை ஒன்றையும் தயாரித்துள்ளார்.

ஹேரத் முதியன்சலாகே சுசந்த குமார என்ற பெயரில் இந்த போலி அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேகநபர் குறித்த தகவல் தெரிந்தால், உடனடியாக 031-2227210, 077-2607118, 077-5856604 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.